தென்கிழக்கு பல்கலையில் இளங்கலை மாணவர்களுக்கான 4 ஆவது சர்வதேச நிதியியல்சார் ஆய்வு மாநாடு 2025!



லங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் “நிதியல் தினம் 2025” எனும் தொனிப்பொருளில் சர்வதேச நிதியல்சார் ஆய்வு மாநாடு, நிகழ்வுகளில் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஏ.எல்.அப்துல் றவூப்பின் நெறிப்படுத்தலில், முகாமைத்துவ வர்த்தக பீடத்தின், கணக்கியல் மற்றும் நிதித்துறையின் துறைத்தலைவர் எம்.ஏ.சி.என். ஷபானாவின் தலைமையில் 2025.02.27 ஆம் திகதி பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீட கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

பல்வேறு தலைப்புகளுடனான அமர்வுகளைக் கொண்டு இடம்பெற்ற நிகழ்வில் வரவேற்புரையை பேராசிரியர் அப்துல் றவூப் நிகழ்த்தினார். Sri Lanka Finance Association and Department of Accountancy and Finance Faculty of Management and Commerce, South Eastern University of Sri Lanka ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக பதில் உபவேந்தர் கலாநிதி யூ. எல். அப்துல் மஜீத் அவர்களும் கௌரவ அதிதியாக முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபாவும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

நிகழ்வின் பிரதம விருந்தினராகவும் பேச்சாளராகவும் The Securities and Exchange Commission of Sri Lanka, and President, SLFA வின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் டி.வி.பி.எச். திஸ்ஸபண்டார கலந்துகொண்டு உரையாற்றியதுடன் குழு விவாதங்களிலும் கலந்துகொண்டு உரையாற்றினார்.

நிகழ்வின் போது சர்வதேச இளங்கலை மாணவர்களுக்கான நிதி ஆராய்ச்சி மாநாட்டின் தொடக்க விழா நிகழ்வுகளும் கிழக்குமாகான பாடசாலை மட்ட மற்றும் பல்கலைக்கழக அளவிலான வினாடி வினா போட்டிகளும் கொழும்பு பங்குச் சந்தை (CSE) மற்றும் பத்திரங்கள் மற்றும் Securities and Exchange Commission (SEC) நடத்திய நிதி சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அடங்கிய சிறப்பு அமர்வுகளும் இடம்பெற்றன.

இந்த நிகழ்வுகள் அறிவுப் பகிர்வு, நெட்வொர்க்கிங் மற்றும் மாணவர்களின் தொழில்முறை வளர்ச்சிக்கு பங்களிப்பதற்கான ஒரு மதிப்புமிக்க தளமாக அமைந்திருந்தது. பிராந்திய சமூகத்தை இணைக்கும் இவ்வாறான நிகழ்வுகள் தென்கிழக்கு பல்கலைக்கழக வரலாற்றில் முதன்முறையாக இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

AIUFRC 2025 செயலாளர் கலாநிதி எம்.ஐ. எம். றியாத், சிறந்த கட்டுரையாளர்களின் பெயர்களை அறிவித்தார். குறித்த கட்டுரையாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டன.

அடுத்த அமர்வில் : மூலதனச் சந்தைகள் மூலம் தொழில்முனைவோரை மேம்படுத்துதல் எனும் தலைப்பில் இடம்பெற்ற நிகழ்வில் தொழில் முனைவோர் திறன்கள் தொடர்பில் பேராசிரியர் எம்.ஏ.சி. ஷல்ஃபியா உம்மா உரையாற்றினார். அமர்வின் ஆரம்ப உரையை . சிரேஷ்ட பேராசிரியர் டி.வி.பி.எச். திஸ்ஸபண்டார ஆற்றினார்.

சமர்ப்பணம் 1 - மூலதனச் சந்தைகள் மற்றும் நிதி விருப்பங்களைப் புரிந்துகொள்வது தொடர்பில் வணிகம், கொழும்பு பங்குச் சந்தை (CSE) சிரேஷ்ட துணைத் தலைவர் புண்யமாலி சப்பரமடு உரையாற்றினார்.

சமர்ப்பணம் 2 - CSE மூலம் மூலதன திரட்டல் - தொடர்பில் - HNB முதலீட்டு வங்கியின் துணைத் தலைவர் செல்லத்துரை வசந்தகுமார், வழங்கினார்.

நிகழ்வின்போது குழு விவாதம் ஒன்றும் இடம்பெற்றது. இதில் – பட்டியலிடலை நோக்கிய பயணம் மற்றும் பட்டியலுக்குப் பின்னரான செயற்பாடு எனும் தலைப்பில் நிறுவன விவகாரங்கள் பணிப்பாளர், SEC மானுரி வீரசிங்க, SVP - வர்த்தகம், CSE புண்ணியமாலி சப்பரமடு , HNB முதலீட்டு வங்கி துணைத் தலைவர் செல்லத்துரை வசந்தகுமார் மற்றும் குழு விவாததத்தின் ஒருங்கிணைப்பாளராக செயற்பட்டார் மட்டக்களப்பு CSE கிளை முகாமையாளர், சிவானந்தன் ராமன் முத்துக்கிருஷ்ணன் செயற்பட்டார்.

விவாதத்தின்போது பிராந்தியத்தின் முன்னணி வர்த்தக செயற்பாட்டாளரும் றியோ குழுமத்தின் நிறைவேற்று பணிப்பாளரும் தொழில் முனைவோருமான நெய்னா முகம்மட் றிஸ்மிர், ஹில்மாஸ் லங்கா நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளரும் தொழிலதிபருமான எம்.ஐ.எம். இல்லியாஸ், அகமட் அண்ட் பிரதர்ஸ்  நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர்  அலியார் முகம்மட் காசீம்  கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் உள்ளிட்ட பலர் இணைந்துகொண்டு சந்தேகங்களை தெழிவுபடுத்திக்கொண்டனர்.

நிதி விழிப்புணர்வு தொடர்பான அமர்வில் எம்.ஏ.சி.என். ஷபானா ஆரம்ப உரையாற்றினார். பின்னர் மூலதனச் சந்தையின் நம்பிக்கை தொடர்பில் கொழும்பு பங்குச் சந்தையின் பிரதி பணிப்பாளர் துஷார ஜெயரத்ன, கொழும்பு பங்குச் சந்தையின் மட்டக்களப்பு கிளை முகாமையாளர் ஆர். எம். சிவநாதன், அமானா வங்கியின் சந்தைப்படுத்தல் மற்றும் நிதி உள்ளடக்கத் தலைவர் முவாத் முபாரக், ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

இங்கு இடம்பெற்ற வினாவிடை போட்டிகளில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு விரிவுரையாளர் ஏ.ஆர்.எவ். தபானியும் பாடசாலை மாணவர்களுக்கு விரிவுரையாளர் எம். பர்விஸ் உம் பிரதான ஒருங்கிணைப்பாளர்களாக செயற்பட்டனர்.

போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பணப்பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வின்போது பீடாதிபதிகள் பேராசிரியர்கள் திணைக்களங்களின் தலைவர்கள், விரிவுரையாளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள், இலங்கை வங்கியின் இஸ்லாமிய வங்கிச் செயல்பாடுகள் பிரிவின் சார்பில் முஸ்தகீம், கல்விசாரா உத்தியோகத்தர்கள் பல்கலைக்கழக மற்றும் பாடசாலை மாணவர்கள் என பலரும் பங்கு கொண்டிருந்தனர்.




































எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :