உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் அரசியல் கட்சிகள் இணைந்து மகஜர் கையளிப்பு



அஸ்லம் எஸ்.மெளலானா-
ள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பு மனுக்கான திகதி அறிவிப்பதற்கு முன்பு தேர்தல் ஆணைக்குழுவானது சகல அரசியல் கட்சி செயலாளர்களையும் சந்திக்க வேண்டும் என்று சில முக்கிய அரசியல் கட்சிகள் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.

இது தொடர்பான மகஜர் ஒன்று தேர்தல் ஆணையாளர் சமன் சிறி ரத்நாயக்கவிடம் இன்று வியாழக்கிழமை (13) கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர எம்.பி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் எம்.பி, மலையக மக்கள் முன்னணியின் தலைவர் இராதாகிருஷ்ணன் எம்.பி உள்ளிட்டோர் தேர்தல் செயலகத்திற்கு நேரடியாக சென்று இம்மகஜரை கையளித்துள்ளனர்.
மகஜரை பெற்றுக் கொண்ட தேர்தல் ஆணையாளர், குறித்த கோரிக்கையை சாதகமாக பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளார் என்றும் நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :