ஆலையடிவேம்பு பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் வருடாந்த பொதுச் சபை கூட்டம் அதன் தலைவர் நா. ஏராம்பமூர்த்தி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலக தலைமை கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.சி.ஜலால்டீன், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஏ. நடராசலிங்கம், எஸ்.எல். நஜீமா, எஸ். ஜாபீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
2025 ஆம் வருடத்திற்கான வரவு செலவுத் திட்டம், உச்சக்கடன் எல்லை, 2023ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு அறிக்கை உட்பட ஏனைய அபிவிருத்தி செயற்திட்டங்கள் என்பனவும் பொதுச் சபையினரால் இதன்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது.
0 comments :
Post a Comment