தென்கிழக்கு பல்கலைக்கழகமும் தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனமும் இணைந்து நடாத்திய பல்கலைக்கழக ஊழியர்களுக்கான இரண்டாம் மொழி சிங்கள வகுப்பின் இறுதி நாள் நிகழ்வும் கற்பித்த ஆசிரியர்களை கௌரவிப்பும் பல்கலைக்கழக ஊழியர் சங்க தலைவர் முனாஸ் முகைடீன் தலைமையில் 2025.02.18 ஆம் திகதி ஊழியர் மேம்பாட்டு நிலைய கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக ஊழியர் மேம்பாட்டு நிலைய பணிப்பாளர் சிரேஸ்ட விரிவுரையாளர் எச்.எம் நிஜாம் அவர்களும் கௌரவ அதிதியாக ஊழியர் மேம்பாட்டு நிலைய திட்ட முகாமையாளர் சிரேஸ்ட உதவி பதிவாளர் எம். எச் நபார் அவர்களும், வர்த்தக முகாமைத்துவ பீட விரிவுரையாளர் எம் சிராஜ் அவர்களும் கலந்து கொண்டனர்.
விஷேட அதிதிகளாக ஊழியர் சங்க செயலாளர் முகம்மத் காமில், ஊழியர் மேம்பாட்டு நிலைய உத்தியோகத்தர்களான ஏ.ஜி. ரொஸான் ஐ.எம்.. முஸம்மில் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் சிங்கள பாடநெறியை கற்பித்த ஆசிரியர்களான கே. துஜோகாந், கே. நந்தினி, எம். யசோதரனி, ஜே. கல்பனி ஆகியோர் பாட நெறியை பூர்த்தி செய்த ஊழியர்களினால் கௌரவிக்கப்பட்டனா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment