ஐக்கிய மக்கள் காங்கிரஸ் கட்சியின் காரியாலயங்களில் ஒன்று சாய்ந்தமருதில் விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளதாக அந்த கட்சியின் பொதுச்செயலாளர் யஹ்யாகான் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
நாட்டிலுள்ள அநேகமான கட்சிகள் மீது மக்கள் வெறுப்புற்றுள்ளதாகவும் மக்களது நலனுக்காக மக்களது வாக்குகளைப் பெற்று எதிர்க்கட்சிகளில் இருக்கும் சில அரசியல்வாதிகள் அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் எதிர்க்கும் மனோநிலையில் இருப்பதாகவும் அவ்வாறான நிலை மாறி நாட்டையும் மக்களையும் பற்றி யோசிக்கக்கூடிய சிறந்தவர்கள் தங்களது கட்சியின் பக்கம் அணிதிரள்வதாகவும் மேலும் தெரிவித்தார்.
சுசந்த புஞ்சிநிலமே, பிரதி அமைச்சராக இருந்த காலங்களில் இன மத வேறுபாடின்றி அனைத்து மக்களதும் நாட்டினதும் நலனில் மிகுந்த அக்கறையுடன் செயட்ப்பட்டதாகவும் தெரிவித்தார்.
நாட்டுப்பற்றுள்ள அனைத்து மக்களும் இன மதபேதமின்றி தாங்களுடன் இணைந்து செயற்பட முன்வருமாறும் கட்சியின் பொதுச்செயலாளர் ஏ.சி. யஹ்யாகான் அழைப்பு விடுத்துள்ளார்.
0 comments :
Post a Comment