இலங்கை மத்திய வங்கியும் தென்கிழக்கு பல்கலைக்கழகமும் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி!



லங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிராந்திய அலுவலகமும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை கலாச்சார பீட பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த “நிதிசார் நிபுணத்துவம்” குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி (Awareness Programme on “Financial Literacy”) பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் துறையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ். சந்திரகுமார் தலைமையில் கலை கலாச்சார பீட கேட்போர்கூடத்தில் 2025.02.20 ஆம் திகதி இடம்பெற்றது.

நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல்.அப்துல் மஜீத் மற்றும் கௌரவ அதிதியாக கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

நிகழ்வின் தொடக்கவுரையை இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிராந்திய முகாமையாளர் கே. பிரபாகரன் ஆற்றியதுடன் இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிராந்திய அலுவலக முகாமையாளர் தி. சஞ்சீவன்’ நிகழ்வின் வளவாளராக கலந்துகொண்டு உரையாற்றினார்.

இரண்டு அமர்வுகளாக இடம்பெற்ற இந்நிகழ்வில் காலை நிகழ்வாக முதலாம் வருட மாணவர்களும் மாலை நிகழ்வில் பொருளியல் பிரிவில் விஷேட தரத்தில் கற்கும் மாணவர்களும் இணைந்து கொண்டனர்.

நிகழ்வின் இறுதியில் விரிவுரையாளர் எம்.என்.எவ்.வஷிமா நன்றியுரை நிகழ்த்தினார்.



































 







எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :