One Week Multi-Disciplinary International Conference (Hybrid Mode) on Contemporary Social Issues: A Global Perspective ஆய்வரங்கின் முதல் அமர்வுக்கு வருகைதந்தந்திருந்த வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு ஆய்வாளர்களை கலை கலாச்சார பீடத்தின் சமூகவியல் துறையின் துறைத்தலைவர் பேராசிரியர் எஸ். எம். ஐயூப் வரவேற்று உரையாற்றினார்.
பல்துறைசார் சர்வதேச மாநாட்டின் இலங்கை அமர்வின் பிரதம அதிதியாக பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல்.அப்துல் மஜீத் கலந்துகொண்டு உரையாற்றினார்.
மாநாட்டின் பிரதான பேச்சாளர்களாக இந்தியாவின் தமிநாடு, பாரதி பெண்கள் கல்லூரியின் (Autonomous) புவியல்துறை இணைப்பேராசிரியர் சாந்திதேவி மற்றும் இந்தியாவின் மும்பாய் நிர்மலா நிகேதன், சமூகப் சேவை கல்லூரியின் International Conference Secretariate, ISS, Coordinator - Research & Development Cell, கலாநிதி பெனட் ராஜதுரை ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
மாநாட்டின் கட்டமைப்பு தொடர்பில் இந்தியாவின் தமிழ்நாடு, மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் புவியல்துறையின் முன்னாள் பேராசிரியர் தி. வசந்தகுமாரன் உரையாற்றினார்.
பின்னர் நிகழ்வுக்கு தலைமைவகித்த தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் தலைமையுரையாற்றினார்.
இலங்கையிலும் இந்தியாவிலும் இடம்பெறவுள்ள குறித்த ஆய்வரங்குக்கு 150 க்கு மேற்பட்ட கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்த போதும் அதில் 109 கட்டுரைகள், நிகழ்வில் சமர்ப்பனத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. எடுத்துக்கொள்ளப்பட்டன.
நிகழ்வின்போது ஆய்வரங்கில் முன்வைக்கப்பட்ட கட்டுரைகளின் ஆய்வுச் சுருக்கங்கள் அடங்கிய புத்தகமும் ---வெளியிட்டு வைக்கப்பட்டது.
தென்கிழக்கு பல்கலைக்கழக கலை கலாச்சார பீடத்தின் புவியல்துறையின் துறைத்தலைவரும் ஆய்வரங்கில் இணைப்பாளருமான சிரேஷ்ட விரிவுரையாளர் கே. நிஜாமிர் நன்றியுரையாற்றினார்.
இடம்பெற்ற ஆய்வரங்கின் தொடர் நிகழ்வு, எதிர்வரும் 2025.02.24 ஆம் திகதி இந்தியாவின் சென்னையில் இடம்பெறவுள்ளன. இந்த தொடர் ஆய்வரங்கின் வளவாளர்களாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத், புவியல்துறையின் தவிசு பேராசிரியரும் மாநாட்டின் ஏற்பாட்டாளர்களில் ஒருவருமான எம்.ஐ.எம். கலீல் மற்றும் கலை கலாச்சார பீடத்தின் புவியல்துறையின் துறைத்தலைவர், சிரேஷ்ட விரிவுரையாளர் கே. நிஜாமிர் ஆகியோர் செல்லவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆய்வரங்கின் ஏற்படுகளை RC25: Sociology of Sports, Indian Sociological Society New Delhi, South Eastern University of Sri Lanka, Faculty of Education of IAIN Madura Indonesia ஆகிய அமைப்புக்கள் செய்திருந்தன.
நிகழ்வின்போது இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீட பீடாதிபதி அஷ்செய்க் எம்.எச்.ஏ. முனாஸ், பேராசிரியர்கள், துறைத்தலைவர்கள், விரிவுரையாளர்கள், கட்டுரைகளைச் சமர்ப்பித்த உள்நாட்டு வெளிநாட்டு கட்டுரையாளர்கள் மாணவர்கள் என பலரும் பங்குகொண்டிருந்தனர்.
0 comments :
Post a Comment