பெரியநீலாவணையில் மதுபானசாலைக்கு எதிரான மக்களின் போராட்டம் இரண்டாவது நாளாக தொடர்கிறது.! ஆர்ப்பாட்டப் பகுதியில் பொலீசார் குவிப்பு.



வி.ரி.சகாதேவராஜா-
பெரியநீலாவணையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுபான சாலைக்கு எதிரான மக்களின் போராட்டம் இன்று (13) வியாழக்கிழமை இரண்டாவது நாளாக தொடர்கிறது.

அதேவேளை ஆர்ப்பாட்டப் பகுதியில் பொலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கல்முனை பெரியநீலாவணையில் புதிதாக மதுபான சாலை ஒன்று திறக்க பட்டதனை தொடர்ந்து பெரியநீலாவணை பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அதனை மூடுமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.
பெரியநீலாவணை பொது அமைப்புகளும், பொதுமக்களும், இணைந்து கல்முனை வடக்கு பிரதேச செயலாளரிடம் மதுபான சாலையை அகற்றுமாறு கூறிய மகஜுரும் கையளிக்கப்பட்டதை தொடர்ந்து தற்காலிகமாக தனது அதிகாரத்துக்குட்பட்டு மூட நடவடிக்கை எடுத்திருந்தார்.

இந் நிலையில் மதுபான சாலை நேற்று 11) மீண்டும் திறக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று பௌர்ணமி தினம் என்பதால் மதுபான சாலை மூடப்பட்டிருந்த நிலையில், ஆர்ப்பாட்டம் நடைபெறவில்லை.

இன்று வியாழக்கிழமை மீண்டும் மதுபான சாலை திறந்தபோது தொடர்ந்து மக்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆர்ப்பாட்டம் நடைபெறும் பகுதியில் பொலீசார் பெருமளவு குவிக்கப்பட்டுள்ளனர்.
பெரியநீலாவணை பொலீஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் ஆர்ப்பாட்ட காரர்கள் ஒரு சிலர் மீது கல்முனை நீதவான் நீதிமன்றத்தின் தடை உத்தரவினையும் பெற்று அங்கு வாசித்துக் காட்டியதோடு, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொள்ளுமாறு கூறினர்.

பொது மக்களின் ஆர்ப்பாட்டம் தொடர்கிறது.

வரலாறு. பெரியநீலாவணையில் ஏலவே காலா காலமாக ஒரு மதுபான சாலை இயங்கி வருகிறது.

அதேவேளை கடந்த வருடம் புதிய மதுபானசாலை ஒன்று திறந்து வைக்கப்பட்டது. அதனை பொதுமக்களும், பொது அமைப்புகளும் ஆலய பரிபாலன சபையினரும், பல்வேறு பட்ட எதிர்ப்புகளை தெரிவித்து கல்முனை வடக்கு பிரதேச செயலாளருக்கு மகஜர் கையளித்ததன் மூலம் தற்காலிகமாக அது மூடப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து மீண்டும் இந்த வருடம் மதுபான சாலையை திறப்பதற்குரிய நடவடிக்கையை உரிமையாளர் மேற்கொண்ட போதும், மீண்டும் பொதுமக்கள் கல்முனை வடக்கு பிரதேச செயலத்துக்கு முன்பாக ஒன்று கூடி விளக்குமாற்றுடன் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொண்டு இருந்தனர். அத்தோடு மதுவரி திணைக்கள அதிகாரிகளிடம் பொது அமைப்புகளும் ஆலய பரிபாலன சபையினரும் பெரியநீலாவணையில் ஏற்கனவே மதுபான சாலை ஒன்று இருப்பதாகவும், மற்றும் ஒரு மதுபான சாலை அவசியம் இல்லை என்பதையும், கூறி எமது கிராமத்து மக்களுக்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதனை தெரிவித்து மகஜர் ஒன்றினை கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ஊடாக கையளித்திருந்தனர்.

அதன் பின்னர் மதுவரி திணைக்கள அதிகாரிகள் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு வருகை தந்து மகஜர் கையளித்த பொது அமைப்புகளையும் ஆலய பரிபாலன சபையினரையும் சந்தித்து விசாரணைகளையும் மேற்கொண்டு இருந்தனர்.
இவ்வாறு பொதுமக்கள் எதிர்ப்புகள் தெரிவித்த போதும் நேற்றுமுன்தினம் (11) காலை தொடக்கம் மதுபான சாலை மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அதனை எதிர்த்து மக்கள் தொடர்ந்து கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட ஆரப்பித்திருக்கின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :