தென்கிழக்குப் பல்கலைக்கழக பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல்.அப்துல் மஜீதின் அனுமதியுடன் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பாலின சமத்துவம் மற்றும் சமத்துவத்துக்கான நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் பிரபா மானுரத்ன கலந்துகொண்டு உரையாற்றியதுடன் சான்றிதல்களையும் வழங்கி வைத்தார்.
CMIL நிகழ்ச்சித்திட்ட அலுவலர் ரண்டி உசாரவின் வழிநடத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலை கலாச்சார பீட சமூகவியல் துறையின் துறைத்தலைவர் பேராசிரியர் கலாநிதி எஸ். எம். ஐயூப், கலாநிதி ஏ.டப்ளியு.என். நளீபா, மாணவர்கள் நலன்புரி சேவைகள் நிறுவனத்தின் பணிப்பாளரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஏ.எல்.எம். ஐயூப்கான் மற்றும் கலாநிதி எஸ். அனுசியா ஆகியோர் கலந்துகொண்ட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.
நிகழ்வில் Future World Sri Lanka (Equipment Partner) பொது முகாமையாளர் ராமேஸ் டி சில்வா கௌரவ அதிதியாக கலந்துகொண்டு நிகழ்ச்சித்திட்டம் தொடர்பில் உரையாற்றினார்.
நிகழ்வின்போது கலாநிதி எம்.சி. றஸ்மின் மற்றும் விடிவெள்ளி பத்திரிக்கையின் பிரதம ஆசிரியர் எம்.பீ.எம்.பைரூஸ் உள்ளிட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர்களும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பிரதேச செயலகங்களின் பெண்கள் நல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் நலன்சார் பகுதிகளில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் மாணவர்கள் என பலரும் பங்குகொண்டிருந்தனர். நன்றியுரையை நிகழ்வின் இணைப்பாளரரும் சமூகவியல் துறையின் விரிவுரையாளருமான என்.லும்னா நிகழ்த்தினார்.
0 comments :
Post a Comment