மு.கா தலைவர் ரவுப் ஹக்கீம் மூலமாக சாய்ந்தமருதில் மாத்திரம் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி வேலைகள்.



மு.கா தலைவர் ரவுப் ஹக்கீம் அமைச்சராக இருந்தபோது எந்தவித அபிவிருத்தி வேலைகளும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டினை சிலர் தொடர்ந்து சுமர்த்தி வருகின்றனர்.
 
உண்மையில் அவ்வாறு எதுவும் செய்யாதுவிட்டால் செய்யவில்லை என்று கூறுவதில் தவறில்லை.
 
ஆனால் வேண்டுமென்று திட்டமிட்டு பொய் பிரச்சாரங்கள் மேற்கொள்ளும்போது உண்மைகளை அறிந்துள்ள எங்களைப் போன்றவர்கள் அதனை கடந்துசெல்ல முடியாது.
 
அதனால் நான் பிறந்த ஊரான சாய்ந்தமருதில் மாத்திரம் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகளை முதலில் இங்கே வழங்குகிறேன்.
2015 தொடக்கம் 2019 வரைக்கும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு நகர திட்டமிடல் அமைச்சராக இருந்தபோது;
 
01. சாய்ந்தமருது தோனா அபிவிருத்திக்காக 150 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டு பின்பு 70 மில்லியன்களுக்கு மேல் வேலை நடைபெற்றது. பள்ளிவாசல் போராட்டத்தின்போது வேலை இடையில் நிறுத்தப்பட்டு பின்பு அரசாங்கம் மாறியதனால் மிகுதி வேலைகள் தடைப்பட்டது.
 
02. சாய்ந்தமருதில் உள்ள உள்ளூர் கொங்ரீட் வீதிகள், LED வீதி விளக்குகள் அமைக்கப்பட்டமை ஆகியவற்றுக்காக 30 மில்லியன்கள் செலவழிக்கப்பட்டது.
03. சாய்ந்தமருதில் தற்போது உடைந்து கிடக்கின்ற Beach Park அமைப்பதற்காக 12 மில்லியன்கள் செலவழிக்கப்பட்டது.
 
04. சாய்ந்தமருது பௌசி மைதானம் மற்றும் அதனை சுற்றிய கட்டுகளை அமைப்பதற்காக 12 மில்லியன்கள் செலவழிக்கப்பட்டது.

05. தற்போது சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்கு கீழ் கரைவாகுப்பற்றில் உள்ள காணிகளை பெற்று அதனை நிரப்புவதற்காக 60 மில்லியன்கள் செலவழிக்கப்பட்டது. இந்த நிலத்தில் ஒரு பகுதி Taibah Ladies Arabic College க்கு வழங்கப்பட்டது.
 
மேலே கூறப்பட்டவைகள் அனைத்தும் நீர்வழங்கள் வடிகாலமைப்பு நகர திட்டமிடல் அமைச்சராக ரவுப் ஹக்கீம் அவர்கள் பதவி வகித்தபோது செய்யப்பட்ட வேலைகளாகும்.
 
06. சாய்ந்தமருது ஜும்மாஹ் பள்ளிவாசலின் Sound System க்காக பன்னிரண்டு லட்சம் ரூபாய் மு.கா தலைவர் ரவுப் ஹக்கீமின் சொந்த பணம் பெட்டியில்வைத்து ரஹ்மத் மன்சூர் மூலமாக பள்ளியின் நிருவாக சபையிடம் வழங்கப்பட்டது. அவ்வாறு வழங்கப்பட்டு ஒருவருடமும் நிறைவடையாத நிலையில் தலைவரின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

07. ரவுப் ஹக்கீம் அவர்கள் நீதி அமைச்சராக இருந்தபோது சாய்ந்தமருதில் காதி நீதிமன்றம் அமைக்கப்பட்டது.
 
08. மேலும், முஸ்லிம் காங்கிரஸ் மூலமாகவே சாய்ந்தமருது அல்-ஜலால் பாடசாலைக்கு முன்பாக உள்ள Health Centre பெரிய கட்டிடம் அமைக்கப்பட்டது.
 
09. சாய்ந்தமருது கடற்கரை வீதியில் உள்ள மீனவ வாசிகசாலையும் முஸ்லிம் காங்கிரசின் அதிகாரத்தின் மூலமாகவே அமைக்கப்பட்டது.
 
10. சாய்ந்தமருது பொது விளையாட்டு மைதானத்தினை நிரப்புவதற்காக அமைச்சர் ரவுப் ஹக்கீமின் நிதி ஒதுக்கீட்டில் கல்முனை மாநகரசபையினால் ஏராளமான பணம் செலவளிக்கப்பட்டது.

இங்கே நான் குறிப்பிட்டவைகளுக்கான ஆதாரங்களை நீங்கள் கல்முனை மாநகரசபை, சாய்ந்தமருது பிரதேச செயலகம் ஆகியவற்றில் உத்தியோகபூர்வமாக பெற்றுக்கொள்ள முடியும்.
 
அத்துடன் சாய்ந்தமருதை பிரதிநிதித்துவப்படுத்தி ரிஸ்வி சின்னலெப்பை, எஸ். நிஜாமுதீன் ஆகிய இருவருக்கு இரண்டு சந்தர்ப்பங்களில் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் பதவி ரவுப் ஹக்கீமால் வழங்கப்பட்டதுடன், எஸ்.நிஜாமுதீனுக்கு மேலதிகமாக பிரதி அமைச்சர் பதவியும் பெற்றுக்கொடுக்கப்பட்டது.
 
இது சாய்ந்தமருதில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை மாத்திரம்தான் இங்கே குறிப்பிட்டுள்ளேன். இதுபோல் இலங்கையில் நூற்றுக்கணக்கான கிராமங்கள் உள்ளது.
 
முஸ்லிம் காங்கிரஸ் ஒரு தேசிய கட்சி என்பதனால் நாட்டில் உள்ள அனைத்து பிரதேசங்களுக்கும் அமைச்சர் ரவுப் ஹக்கீம் மூலமாக அமைச்சின் நிதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது.
 
நேரம் கிடைத்தால் ஏனைய ஊர்களில் அல்லது மாவட்டங்களில் செலவழிக்கப்பட்ட விபரங்களை வழங்குகிறேன்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :