நிர்வாகச் சீர்கேடுகளுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு



பாறுக் ஷிஹான்-
லங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தின் கீழ் பணிபுரிகின்ற அம்பாரை மாவட்ட தமிழ் மொழிமூல அனைத்து போதனாசிரியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் இணைந்து மாவட்ட பிரதிப் பணிப்பாளர் ரி.வினோதராசாவின் அடக்குமுறை மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தில் முன்றலில் திங்கட்கிழமை(17)  மேற்கொண்டார்.

இதன் போது பிரதிப் பணிப்பாளர் ரி. வினோதராசாவின் நிருவாக முறைமையில் அதிருப்தி அடைந்த சகல உத்தியோகத்தர்களும் அவரை உடனடியாக இடம் மாற்றக் கோரி இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபை ஒருங்கிணைந்த சுதந்திர தொழிற்சங்க செயலாளர் நிஹால் விதானகேவின் வழிகாட்டுதலில் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இப்பிரதிப் பணிப்பாளர் அவரின் கடந்த சேவைக்காலங்களில் பல தண்டனை இடம் மாற்றங்களை பெற்றிருப்பதோடு பலதரப்பட்ட நிருவாக முறைமை மற்றும் நிதி தொடர்பான குற்றங்களுக்காக இடம் மாற்றங்களை பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.









எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :