மரத்தின் வேந்தர்களுக்கு அட்டாளைச்சேனை மண்ணின் பெருவிழா.!



நூருல் ஹுதா உமர்-
டந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வு 'மரத்தின் வேந்தர்களுக்கு மண்ணின் பெருவிழா' எனும் தொனிப்பொருளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அட்டாளைச்சேனை மத்திய குழு ஏற்பாட்டில் அட்டாளைச்சேனை மீலாத் சதுக்கத்தில் (9) நடைபெற்றது.

இந்நிகழ்வில், பத்தாவது பாராளுமன்றத்தை அலங்கரிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களான கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம், கட்சியின் பிரதித் தலைவர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், செயலாளர் எம். நிசாம் காரியப்பர், பிரதி தேசிய அமைப்பாளர் எம்.எஸ் உதுமாலெப்பை மற்றும் தேசிய இணைப்புச் செயலாளர் எம்.எஸ் நழீம் ஆகியோர் இவ்வரலாற்று பெருவிழாவில் கட்சி போராளிகள் மற்றும் பெருந்திரளான மக்கள் புடைசூழ ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில், முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் பெருந்திரளான கட்சியின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :