மட்டக்களப்பு செட்டிபாளையம் சிவன் ஆலய மகா கும்பாபிஷேகம் நேற்று (9) ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
கடந்த 05 ஆம் தேதி புதன்கிழமை கர்மாரம்பத்துடன் ஆரம்பமாகி
எண்ணெய்க்காப்பு சாத்தும் வைபவம் 7 ஆம் 8 ஆம் தேதிகளில் நடைபெற்றது.
தொடர்ந்து மகா கும்பாபிஷேகம் நேற்று 09 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேக பிரதம குரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்தமூர்த்தி குருக்கள் முன்னிலையில் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ க.ஜனார்த்தனன் சர்மா தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சித்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.
தொடர்ந்து மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற்று 20 ஆம் தேதி 1008 சங்காபிஷேகத்துடன் நிறைவடையும் என ஆலய பரிபாலன சபையின் செயலாளர் ம.புவிதரன் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment