நாட்டின் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின் கீழ் பாடசாலையின் சுற்றுச்சூழல் மற்றும் வகுப்பறைகளை சுத்தம் செய்து அழகு படுத்தும் வேலை திட்டம் இன்று (10) மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
பாடசாலையின் அதிபர் எம்.எம்.ஹிர்பகான் தலைமையில் நடைபெற்ற இந்த வேலை திட்டத்தின் போது பாடசாலையின் பிரதி அதிபர், உதவி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து வேலைத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தனர். குறித்த வேலைத் திட்டத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் அதிபர் தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment