வை.எம்.எம்.ஏ மகளிர் பிரிவு அனுசரனையில் வெல்லம்பிட்டியில் உள்ள பொல்வத்தை பாத்திமா அகதியா பாடசாலையில் தையல் பயிற்சி நிலையமொன்று திறந்து வைக்கப்பட்டது. இதற்காக இலங்கையைச் சேர்ந்த கனடாவில் வாழும் திருமதி சீனியா தாசிம் அவர்கள் பத்து தையல் மெசின்களை அன்பளிப்பு செய்துள்ளார்.
வெல்லம்பிட்டி பிரதேசத்தில் பாடசாலை கல்வியை விட்டு வீடுகளில் உள்ள யுவதிகள் சுயதொழில் முயற்சியில் தையல் பயிற்சி பயின்று தமது வாழ்க்கைத் தரத்தையும் சுயதொழில் வருமானத்தினை பெற்றுக் கொள்வதற்காக இவ் முயற்சியை வை.எம்.எம்.ஏ தலைவி பவசா தாஹா, மற்றும் வெல்லம்பிட்டி பொல்வத்தை பள்ளிவாசல் நிர்வாக சபை பாத்திமா அகதியா பாடசாலையும் மேற்கொண்டு இந் நிலையத்தை திறந்து வைத்தனர்
இந்நிகழ்வில் வை.எம்.எம். ஏ முன்னாள் தலைவர்கள் முஹம்மட் ரசுல்டீன், காலித் பாருக் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் அப்பிரதேச யுவதிகளும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment