தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் சித்தியடைந்த மாணவர்களை கௌரவித்து பதக்கங்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் வழங்கும் நிகழ்வு மாஸ் பவுண்டேசன் ஏற்பாட்டில் (12) புதன்கிழமை மாலை வேளையில் நிந்தவூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
நிந்தவூர் கோட்டத்திற்கு உட்பட்ட புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் சித்தியடைந்த 54 மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் மற்றும் பதக்கங்கள் போன்றவை வழங்கப்பட்டது. அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர், வலயக்கல்வி பணிப்பாளர் உள்ளிட்டோருக்கு பொண்ணாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்விற்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளரும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.எம். தாஹிர், கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம், கல்முனை வலயக்கல்வி அலுவலக பிரதி கல்வி பணிப்பாளர் (நிர்வாகம்) எம்.எச்.எம். ஜாபிர், கல்முனை வலயக்கல்வி அலுவலக பிரதி கல்வி பணிப்பாளர் எம்.எச். றியாசா, கல்முனை வலயக்கல்வி அலுவலக பிரதி கல்வி பணிப்பாளர் யு.எல்.எம். சாஜித், கல்முனை வலயக்கல்வி அலுவலக பிரதி கல்வி பணிப்பாளரும் நிந்தவூர் கோட்டக் கல்வி பணிப்பாளர் எம்.எல்.எம். முத்தரைஸ், நிந்தவூர் அனைத்து பாடசாலை அதிபர்கள், முன்னால் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment