முன்பள்ளி சுகாதார மேம்பாட்டு திட்டத்தின் ஒரு அம்சமாக சம்மாந்துறை அல்-வாஸித் முன் பள்ளியில் நடை பெற்ற நிகழ்வில் பிள்ளைகளின் பற் சுகாதாரம் பரிசோதிக்கப்பட்டதுடன் பல் துலக்கும் பொறிமுறையும் மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன் கடந்த வியாழக்கிழமை(20) அன்று தமது சுற்றாடலை அவதானிக்கும் முறை சாப்பாட்டு முறை என்பன குறித்து பிள்ளைகளுக்கு விளக்கம் அளிக்கபபட்டதுடன் பிள்ளைபளின் உயரம் நிறை என்பன அளவிடப்பட்டு உடற் திணிவுச் சுட்டென் (BMI) கணிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் பைலான் நளீம் மற்றும் பாடசாலை பற் சிகிச்சையாளர் சஹீர் பேகம் பொதுச்சுகாதார பரிசோதகர் தினேஸ் பிரதேச குடும்ப நல உத்தியோகத்தர்ரிப்னா கலந்நு கொண்டனர்.
0 comments :
Post a Comment