உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்த சட்டமூலம் மூன்றில் இரண்டு பெரும் பான்மையால் நிறைவேற்றப்பட வேண்டும்.!



ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாரளமன்ற உறுப்பினர் அல்-ஹஜ் ரவூப் ஹக்கீம்,LLM அவர்களினால் சட்டத்தரணியா (Counsel) வாதாடப்பட்ட உச்ச நீதிமன்ற வழங்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.இவ்வழக்கின் மனுதரராக (Petitioner) ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி செயலாளர் நாயகம்,ஜனாதிபதி சட்டத்ரணி நிசாம் காரியப்பர், PC,MP அவர்கள் செயற்பட்டார்.

இதன் தீர்ப்பு இன்று(14.02.2025) பாராளுமன்றத்தில் சபாநாயகரால் அறிவிக்கப்பட்டது.
உள்ளுர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்)" எனும் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்
அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்டு மூன்று நீதிபதிகள் கொண்ட குழாத்தினால் விசாரிக்கப்பட்ட "உள்ளுர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்)" எனும் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தனக்குக் கிடைக்கப்பெற்றுள்ளதாக சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (14) நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
அதற்கமைய, சட்டமூலம் முழுமையாகவும் மற்றும் குறிப்பாக 2 மற்றும் 3 ஆம் வாசகங்கள் அரசியலமைப்பின் 12(1) ஆம் உறுப்புரையுடன் முரண்படுவதால், அரசியலமைப்பின் 84(2) ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கிணங்க விசேட பெரும்பான்மையொன்றின் மூலம் மாத்திரமே அங்கீகரிக்கப்பட முடியும் என நீதிபதிகள் குழாத்தின் பெரும்பான்மையினராகிய நீதிபதிகள் இருவர் தீர்பளித்துள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.
அத்துடன், சட்டமூலம் முழுமையாகவும் அல்லது அதன் எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்புடன் முரண்படுவதனால் அதனைப் நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையொன்றின் மூலம் நிறைவேற்றப்பட முடியும் என நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளதாகவும் சபாநாயகர் தனது அறிவித்தலில் மேலும் தெரிவித்தார்.


ஏ.சி. சமால்டீன்(Ex MMC),
உச்சபீட உறுப்பினர்,
மாவட்ட செயற்குழு செயலாளர்,
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்,
அம்பாறை.
14/02/2025.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :