தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சகல மத மற்றும் இனங்களுக்கும்; சம அந்தஸ்த்து வழங்கப்படுகிறது. பொங்கல் நிகழ்வில் உபவேந்தர் அப்துல் மஜீத்



தென்கிழக்குப் பல்கலைக்கழகம்; வெவ்வேறு மதங்களைப் பின்பற்றுகின்ற பல இன பின்னனிகளைக் கொண்ட மாணவர்கள், மற்றும் ஊழியர்களைக்கொண்ட பல்கலைக்கழகம். இங்கு எந்த இனத்தினருக்கோ அல்லது மதங்களை பின்பற்றுபவர்களுக்கோ எவ்வித முன்னுரிமையும் கிடையாது. சகலரும் சமமாக மதிக்கப்படுகின்றனர். இங்கு சகல மதத்தினரும் தங்களது மத கடமைகளை மேற்கொள்ள எல்லா வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன என தென்கிழக்குப் பல்கலைக்கழக பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல்.அப்துல் மஜீத் தெரிவித்தார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக முகாமைத்துவ வர்த்தக பீட மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த பொங்கல் நிகழ்வு, பீடத்தின் தமிழ் மாமன்றத்தின் தலைவரது தலைமையில் 2025.02.13 ஆம் திகதி, பீடத்தின் முற்றலில் இடம்பெற்றது இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே பதில் உப வேந்தர் கலாநிதி அப்துல் மஜீத் மேற்படி தெரிவித்தார்.

ஒவ்வொரு மதங்களை பின்பற்றும் மத குழுமத்தினரும் அவ்வப்போது பல்வேறு கொண்டாடங்களை கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில் இந்துக்கள் பொங்கல் பண்டிகையை மிக விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். நமது பல்கலைகழகத்தில் மாணவர்கள் ஒவ்வொரு பீடங்களிலும் அவ்வப்போது வெவ்வேறு பெருநாட்களையும் கொண்டாட்டங்களையும் கொண்டாடி வருகின்றனர். இவ்வாறான கொண்டாட்டங்களில் எல்லா மதங்களை பின்பற்றுபவர்களும் பங்குகொண்டு சிறப்பிப்பது எங்களுக்கு மிகுந்த பெருமையைத் தருகின்றது. இனம் மாதங்கள் தாண்டி இவ்வாறாக எல்லோரும் ஒன்றுகூடி நிகழ்வுகளில் ஈடுபடுவது, நாட்டில் சிதைந்து போயுள்ள இனங்களுக்கிடையேயான பரஸ்பர ஒற்றுமைக்கு வழிசமைக்கும்.

எனவே எதிர்காலத்தில் இடம்பெறவிருக்கின்ற மதங்களுடன் சம்மந்தப்பட்ட பிரதான நிகழ்வுகளை எல்லாப் பீடங்களும் ஒன்றிணைந்து ஒரு குடையின் கீழ் ஓரிடத்தில் கொன்னாடுவதனூடாக மேலும் ஒற்றுமையை வலுப்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.

இவ்வாறு மாணவர்களுக்கு இடையே ஒன்றுபட்ட நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய முடியுமாகவிருந்தால்; அந்த நிகழ்வுகளுக்கான நிதியுதவிகளை வழங்க பல்கலைக்கழகத்தால் யோசிக்க முடியும் என்றும் தெரிவித்தார். அப்போதுதான் பல்கலைக்கழகம் எதிர்பார்க்கின்ற இன ஐக்கியமும் ஏற்படும் என்றும் குறிப்பிட்டார்.

நிகழ்வுக்கு கௌரவ அதிகளாக முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபா மற்றும் கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில் ஆகியோரும் கலந்துகொண்டு உரையாற்றினர்.

இதில் பேராசிரியர் முஸ்தபா தனது உரையில் முகாமைத்துவ வர்த்தக பீடத்தில், 12 வருடங்களின் பின்னர் இவ்வாறானதொரு நிகழ்வு இடம்பெறுவது தனக்கு மிகுந்த மகிழ்வைத்தருவதாகவும் எதிர்காலத்தில் எல்லா மதங்களைப் பின்பற்றுபவர்களும் அவரவரது பிரதான மத கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்து, தங்களது மனங்களை சாந்திப்படுத்தும் நிகழ்வுகளிலும் ஈடுபடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இங்கு கருத்துத் தெரிவித்த பேராசிரியர் பாஸில், நாட்டினதும் பல்கலைக்கழகத்தினதும் பிரதான எதிர்பார்ப்பான இனங்களுக்கிடையேயான அன்னியோன்யத்தை உருவாக்க இவ்வாறான நிகழ்வுகள் மிகுந்த ஊடகமாக அமையும் என்றும் இவ்வாறான நிகழ்வுகளில் மாதங்கள் இனங்கள் கடந்து மாணவர்கள் ஒன்று பட்டிருப்பது நாட்டின் ஒற்றுமைக்கு ஒரு தொடக்கப்புள்ளியாக அமையும் என்றும் தெரிவித்தார்.

மாணவர்களது முட்டியுடைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை உபவேந்தர் அப்துல் மஜீத் ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வுகளில் முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பேராசிரியர்களான ஏ.எல். அப்துல் றவ்ப், ஏ.ஜௌபர், எம்.ஏ.சி. சல்பியா உம்மா, மாணவர்கள் நலன்புரி சேவைகள் நிறுவனத்தின் பணிப்பாளரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஏ.எல்.எம். ஐயூப்கான் மற்றும் கலாநிதி எம்.வி.எம்.அம்ஜத், சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.எல்.எம்.ஏ. சமீம் உள்ளிட்டவர்களுடன் விரிவுரையாளர்கள் கல்விசாரா உத்தியோகத்தர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.





















































 





எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :