இது பற்றி அகில இலங்கை உலமா கட்சித்தலைவர் முபாறக் மௌலவி முப்தி அவர்களால் கௌரவ சமய விவகார அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
மேற்படி தமிழ் தர்ஜமா என்பது 1993ம் ஆண்டு மதீனாவில் வெளியிடப்பட்டதாகும். அது உலகம் முழுவதும் தமிழ் பேசும் மக்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்பட்டு வருகிறது. இலங்கை முஸ்லிம்களுக்கும் காலாகாலமாக விநியோகிக்கப்பட்டது.
2019ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கோட்டாபய ராஜபக்ஷவின் இனவாத அரசு இஸ்லாமிய நூல்கள் இலங்கைக்கு வருவதை தடை செய்தது. பின்னர் ரணில் விக்ரமசிங்க ஆட்சிக்கு வந்த இந்ததடை நீக்கப்பட்டது.
இதன் பின்னரே மேற்படி குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு இலங்கைக்கு மக்காவில் வசிக்கும் முஹம்மது சாதிக் சைலானி மூலம் இலவசமாக அன்பளிப்பு செய்யப்பட்டது.
ஆனால் அவை காரணம் இன்றி இன்னமும் வெளி வராமல் சுங்கத்தில் தேங்கி நிற்கிறது.
இதற்கு பிரதான காரணம் கடந்த அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட புத்தக மேற்பார்வையாளர் குழுவின் அலட்சியப்போக்காகும்.
இந்த அரசாங்கம் பதவிக்கு வந்த பின்பும் மேற்படி தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிடாமல் தடுத்து வைத்திருப்பது என்பது கடந்த பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு அரசுக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்த ஒரேயொரு முஸ்லிம் கட்சி என்ற வகையில் உலமா கட்சி கவலை கொள்கிறது.
மேற்படி குர்ஆன் தர்ஜமாவை மொழிபெயர்த்தோரில் ஒருவன் என்ற வகையில் நான் அதிகம் கவலையடைகிறேன். மேற்படி தமிழ் தர்ஜமாவில் இஸ்லாத்துக்கு முரணான எக்கருத்தும் இல்லை என்பதை நான் உறுதிபட கூறுகிறேன்.
மதம் சம்பந்தமான நூல்களை இறக்குமதி செய்ய தடை இல்லை என்ற பிரதி அமைச்சர் அருண ஜயசேகர பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஆனாலும் மேற்படி குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு விடுவிக்கப்படவில்லை.
ஆகவே மேற்படி தமிழ் தர்ஜமாவை உடனடியாக சுங்கத்திலிருந்து வெளிவரச்செய்து அதனை முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் மூலம் விரும்பும் முஸ்லிம்களுக்கு இலவசமாக வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இது சம்பந்தமாக அரச திணைக்ககங்களுக்கிடையிலான கடித போக்குவரத்து பிரதிகளை இத்துடன் இணைத்துள்ளேன்.
முபாறக் முப்தி
தலைவர்
அகில இலங்கை உலமா கட்சி.
தலைவர்,
ஸ்ரீலங்கா ஜம்மியதுல் உலமா கவுன்சில்.
49 A, Mosque Road
Kalmunai.
0 comments :
Post a Comment