கொழும்பில் முப்பெரும் விழா



முஸ்லிம் கல்வி முன்னேற்ற சங்கம் ஏற்பாட்டில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளர் கலாபூசணம் அல்ஹாஜ் அஹமட் முனவ்வர் எழுதியுள்ள 'ஆயிரமாவது குத்பாவும் அஞ்சலும் வரலாறும்' நூல் வெளியீட்டு விழா நாளை சனிக்கிழமை (22) மாலை 4.00 மணிக்கு கொழும்பு ஆனந்த குமாரசுவரி கிரீன்பாத் புதிய நகர மண்டபத்தில் வெகுவிமர்சையாக இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ, பிரதி சபாநாயகர் ரிஸ்வி ஸாலி, தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முலப்பர், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், முஜிபுர் ரஹ்மான், முன்னாள் அமைச்சர் அலி சப்ரி, இலக்கியவாதிகள், சமய சமூகவாதிகள் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர். இந்நிகழ்வில் உலமாக்கள், ஊடகவியலாளர்கள், ஆசிரிய பெருந்தகைகள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்படவுள்ளனர். இவ்விழா மாலை 4.30 முதல் நேரடியாக இலங்கை வானொலி தமிழ் சேவையில் அஞ்சல் செய்யப்படும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :