கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக எம்.ஏ.சீ.றமீஸா இன்று (10/02/2025) உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில், பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் எம்.எச்.எம்.றுவைத், கணக்காளர் ஏ.மோகனகுமார், நிருவாக உத்தியோகத்தர் எம்.தாஹிர், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எஸ்.ஏ.எம்.பஷீர் ஆகியோரும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளராக கடமையாற்றிய எஸ்.எச்.முஸம்மில் ஏறாவூர் நகர்பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்றதை ஏற்பட்ட வெற்றிடத்திற்கே எம்.ஏ.சீ.றமீஸா பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment