இந்நிகழ்வில் கல்முனை கல்வி வலய பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல் நஜீம் பிரதம அதிதியாக வும் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கலை,கலாசார பீடாதிபதி பேராசிரியர் (Dr) எம்.எம். பாஸில் பிரதம உரையாளராகவும், கௌரவ அதிதிகளாக சமூர்த்தி திணைக்கள பிரதம கணக்காளர் வை. ஹபிபுல்லாஹ், அம்பாறை அரசாங்க அதிபர் பிரிவின் பிரதம பொறியியலாளர் எந்திரி ஏ.எம். சாஹிர் அவர்களும் விசேட அதிதியாக கல்முனை கல்வி வலய பிரதி கல்வி பணிப்பாளர் களான எம்.எச்.எம். ஜாபீர், என். வருணியா, எம்.எச். றியாசா, எம்.எல்.எம்.முதர்ரிஸ், அஸ்மா அப்துல் மலிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் வலயக் கல்வி அலுவலக ஆசிரிய ஆலோசகர் எஸ்.எம்.எம். அன்ஸார், சாய்ந்தமருது கமு/கமு/ லீடர் எம்.எச்.எம்.அஸ்ரப் வித்தியாலய அதிபர் எம். ஐ.சம்சுதீன் அடங்களாக தேசிய பாடசாலைகளின் அதிபர்கள், அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா ஆளுநர் சபை உறுப்பினர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதானிகள், சாய்ந்தமருது, நாவிதன்வெளி, கல்முனை கோட்ட அதிபர்கள், பிரதேச சமூக நல செயற்பாட்டாளர்கள், கல்விமான்கள், பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
இதன்போது சாய்ந்தமருது கமு/கமு/ லீடர் எம்.எச்.எம்.அஸ்ரப் வித்தியாலய புலமையாளர்கள், 2023 இல் கல்முனை கல்வி வலயம் தேசிய ரீதியாக சாதிக்க காரணமாக இருந்த வலயக்கல்வி பணிப்பாளர் எஸ்.எஸ். எஸ். நஜீம் , கல்முனை மாநகர சபை மற்றும் கல்முனை கல்வி வலய கணக்காளராக இருந்து பதவி உயர்வு பெற்ற வை. ஹபிபுல்லாஹ், ஊடக, கலை இலக்கிய, சமூக சேவைக்கு பங்களிப்பு செய்தவர்களை கௌரவிக்கப்பட்டதுடன் நினைவு மலரும் வெளியிடப்பட்டது.
0 comments :
Post a Comment