அட்டளைச்சேனை இளங்கலை பட்டதாரிகள் சங்கத்தின் (UGAA) தலைவர் திரு. ஹம்தான் முனவ்வர் மற்றும் அதன் கணக்காய்வாளர் திரு. முஷர்ரப் மௌலானா ஆகியோர் கடந்த 14.02.2024 வெள்ளிக்கிழமை அன்று இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Dr. UL . அப்துல் மஜீத் அவர்களை சந்தித்திருந்தனர்.
மேற்படி இச்சந்திப்பில் இப்பிரதேச மாணவர்களுக்கான கல்விசார் ஒத்துழைப்புக்கள் மற்றும் சமூக மேம்பாடுகள் குறித்து கலந்துரையாடினர்.
பல்கலைக்கழகத்திற்கும் அதனை அண்டிய சமூகங்களுக்கும் பயனளிக்கும் வகையில் பலதரப்பு கூட்டாண்மையை நிறுவுவதில் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப் பட்டது.
இப்பிரதேச இளங்கலை மாணவர்களின் தன்னக திறன்கள் மற்றும் செயல்திறன்களை மேம்படுத்துதல், பல்கலைக் கழகங்களுக்கு மாணவர்களை உள்ளீர்ப்பு செய்வதின் நடைமுறைகள் தொடர்பில் சமூக விழிப்புணர்வை அதிகரித்தல் மற்றும் சமூகத்தில் உள்ள மாணவர்களுக்கு வளங்கள் மற்றும் கல்விக்கான ஒத்துழைப்புகளை விருத்தி செய்தல் போன்றன முக்கிய கலந்துரையாடல் விடயங்களாக அமைந்திருந்தன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment