சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட செந்நெல் கிராம பகுதியில் 7 பேரை கட்டாக்காலி நாய் கடித்த சம்பவம் கடந்த மார்ச் புதன்கிழமை(12) பதிவாகி இருந்தது.
இதற்கமைய 7 பேருக்கு கடித்த நாயின் மாதிரி அறிக்கை Rabies positive என மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (MRI) இனால் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அப் பிரதேசத்தில், பொது மக்களுக்கு விழிப்புணர்வூட்டல், மற்றும் வளர்ப்பு நாய்கள், கட்டாக்காலி நாய்களுக்கு ARV தடுப்பூசி வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம். நௌசாத் ஆலோசனைக்கமைய மாவட்ட மாவட்ட மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம். லாபீர் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குழுவினர் பங்கேற்று உரிய நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகின்றன.
0 comments :
Post a Comment