சாய்ந்தமருது மஸ்ஜிதுல் ஹிதாயா பள்ளிவாசலில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விஷேட இப்தார் நிகழ்வு வியாழக்கிழமை (13) நடைபெற்றது.
பள்ளிவாசல் தலைவர் நிர்வாக சபைத் ஏ.எம். நௌபர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும் ரஹ்மத் பவுண்டேசன் ஸ்தாபக தலைவருமான ரஹ்மத் மன்சூர் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
இதன்போது பள்ளிவாசல் பேஷ் இமாம் ஜினான் மெளலவி றமழான் நோன்பு தொடர்பான சிறப்புரையை நிகழ்த்தியதுடன் விசேட துஆப் பிரார்த்தனையையும் மேற்கொண்டார்.
இந்த நிகழ்வில் உலமாக்கள், பள்ளிவாசல் நிருவாகத்தினர் மற்றும் பிரமுகர்கள் உட்பட மஹல்லாவாசிகள் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment