கல்முனை மாநகர சபைக்கு எதிராக மக்கள் போராட்டம்



பாறுக் ஷிஹான்-
ல்முனை மாநகர சபையினரால் கொட்டப்படும் குப்பைகளினால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறி கல்முனை கிறீன் பீல்ட் வீட்டுத்திட்ட மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.

குறித்த போராட்டமானது கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் அருகில் சனிக்கிழமை(1) நடைபெற்றதுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரதான வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்த வேளை சம்பவ இடத்திற்கு வருகை தந்த கல்முனை தலைமையக பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததுடன் குறித்த பிரச்சினைக்கான சமரச முயற்சிகளிலும் ஈடுபட்டனர்.

இதன் போது இப்போராட்டத்தில் கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டத்தில் வசிக்கின்ற ஆண் பெண்கள் உட்பட சிறுவர்கள் பங்கேற்றதுடன் பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய சுலோகங்களை ஏந்தி நீதி வேண்டி கோஷங்களை எழுப்பினர்.பின்னர் பொலிஸாரின் ஆலோசனைக்கமைய குறித்த போராட்டம் நிறைவு செய்யப்பட்டு உரிய அதிகாரிகளிடம் பேசி தீர்வொன்றை பெற ஆவண செய்ய நடவடிக்கை எடுக்க கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தவிர இப்பகுதியில் மாநகர சபையினராலும் தனியார் சிலராலும் கொட்டப்படும் குப்பைகளினால் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.மேலும் குப்பைகள் எரிக்கப்படுவதனால் பாடசாலை மாணவர்கள் முதல் வயது வந்தோர் சுவாச பிரச்சினைக்கு உள்ளாவதுடன் யானைகளின் அச்சுறுத்தலும் தொடர்வதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :