நாவிதன்வெளி பிரதேச சபை அதிக வரிச் சுமையை மக்களுக்கு விதித்துள்ளது. இது ஒரு பாரிய அநீதி. பிரதேச சபை அதிகாரத்தை மக்கள் எனக்கு வழங்கினால் நிச்சயம் இவைகளுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்கப்படும்.
நாவிதன்வெளி பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை குழு 1( உதைபந்து சின்னம் ) தலைமை வேட்பாளர் நளீர் அபூபக்கர் - இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாவிதன்வெளி பகுதியில் 4 இறைச்சி கடைகள் உள்ளன. கேள்வி மனு பல இலட்சமாக உள்ளது. இதனை குறைத்தால் ஒரு கிலோ இறைச்சியை 1800 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியும். வீணாக மக்கள் மீது அதிக வரிச்சுமை பிரயோகிக்கப்பட்டுள்ளது.
நாவிதன்வெளி பிரதேச சபை அதிகாரம் எமது குழுவுக்கு கிடைக்கும் பட்சத்தில் ஒரு மாதகால இடைவெளிக்குள் இவற்றுக்கு தீர்வை பெற்றுக் கொடுப்பேன்.
திருமண மண்டபத்துக்கும் அதிக வரி. ஒரு திருமணத்துக்கு 50 ஆயிரம் ரூபா அறியப்படுகின்றது. இதுவும் நிவர்த்தி செய்யப்படும் என்றும் நளீர் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment