அட்டாளைச்சேனை பிரதேச அமைப்பாளர் பதவிலிருந்து அமீர் இடைநிறுத்தம்- செயலாளர் சுபைர்தீன்



ஊடகப்பிரிவு-
கில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கான அமைப்பாளர் பதவிலிருந்தும், கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும் ஏ.கே அமீர் தற்காலியமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் எஸ். சுபைர்தீன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில், அவர் மேலும் தெரிவிக்கையில்,

இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தலின் போது, அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்துபோட்டியிடும் நிலையில், கட்சியின் அமைப்பாளராக செயற்பட்ட ஏ.கே. அமீர் கட்சியின் தீர்மானத்தை மீறி, சுயேற்சைக்குழுவொன்றின் வேட்பாளராக வேட்புமனுவை தாக்கல் செய்தமையின் காரணமாக அவர் அமைப்பாளர் பதவியிலிருந்தும், கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும் தற்காலியமாக இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

மேலும், அவருக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணைகள் விரைவில் நடைபெறும் எனவும் செயலாளர் நாயகம் எஸ். சுபைர்தீன் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :