முகாமைத்துவ வர்த்தக பீட மாணவர்களின் புத்தாக்க செயற்பாடு!



லங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக முகாமைத்துவ வர்த்தக பீட 2019/2020 ஆம் கல்வி ஆண்டின்  இறுதி ஆண்டு BBA மாணவர்கள், வளாக முற்றலை பயன்தரும் புத்தாக்க செயற்பாடுகளினூடாக தயார்செய்து சம்மந்தப்பட்டவர்களிடம் கையளித்த நிகழ்வு கடந்த 2025.03.18 ஆம் திகதி இடம்பெற்றது.

“மாணவர் ஈடுபாடு மற்றும் கல்வி வளப்படுத்தலைக் கொண்டாடுதல்” எனும் தொனிப்பொருளில் வளாக உள்கட்டமைப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட நான்கு மாணவர் குழுக்கள் அவரவரால் வடிவமைக்கப்பட்ட திட்டங்களை தயார்செய்து, அவைகளை பல்கலைக்கழக அதிகாரிகளிடம் முறையாக கையளித்தனர்.

கலாநிதி எம்.ஐ.எம். றியாத்தின் வழிகாட்டலில் இடம்பெற்ற நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பல்கலைக்கழக பதிவாளர் எம்.ஐ.நௌபர் கலந்துகொண்டார். அத்துடன் கௌரவ அதிதியாக முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா கலந்து கொண்டதுடன் பீடாதிபதிகளான பேராசிரியர் எம்.எம். பாஸில், பேராசிரியர் எம்.ஏ.எல்.ஏ. ஹலீம் உள்ளிட்டவர்களுடன் நிதியாளர் சி.எம். வன்னியாராச்சி, பல்கலைக்கழக பொறியியலாளர் எம்.எஸ்.எம் பஸில், கியூரேட்டர் ஏ.சம்ஸார் மற்றும் பீடத்தின் பேராசிரியர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், விரிவுரையாளர்கள் கல்விசாரா உத்தியோகத்தர்கள் மாணவர்கள் என பலரும் பங்கு கொண்டிருந்தனர்.

“மாணவர் ஈடுபாடு மற்றும் கல்வி வளப்படுத்தலைக் கொண்டாடுதல்” எனும் கருப்பொருளிலான முழுக்கமுழுக்க மாணவர்களின் சிந்தனையின் வெளிப்பாடான இந்த செயற்பாட்டில், நான்கு மாணவ குழுக்களின் பங்களிப்பில் திட்டங்கள் ஒப்படைக்கப்பட்டன.

1. பசுமை இடம் - விளக்கு நிறுவல் மற்றும் நடவு: சுற்றுச்சூழலுக்கு உகந்த விளக்குகள் மற்றும் பசுமையான புத்துயிர் பெற்ற பயன்படுத்தப்படாத வளாகப் பகுதிகளின் இணைவு, SEUSL கண்காணிப்பாளரிடம் வழங்கப்பட்டது.

2. தொலைநோக்குப் பார்வை கொண்ட கைவினைஞர்கள் - முதல் தோற்றத்தை உயர்த்துதல்: FMC வரவேற்பு மேம்படுத்தல்: அழகியல் மற்றும் செயல்பாட்டைக் கலக்கும் நவீனமயமாக்கப்பட்ட வரவேற்புப் பகுதி, நிதி உதவியாளரால் பெறப்பட்டது.

3. FMC அமைச்சகம் - ஆசிரிய அமைப்பு: மறுவடிவமைப்பு செய்யப்பட்ட, மாணவர்களை மையமாகக் கொண்ட கல்வி இட வரைபடம், பணிப் பொறியாளரிடம் வழங்கப்பட்டது.

4. FMC தொலைநோக்குப் பார்வையாளர்கள் - பசுமை மையம்: சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஊக்குவிக்கும் ஒரு நிலையான பொது இடம், பதிவாளரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.












































இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :