உள்ளூராட்சி தேர்தல் நெருங்கிவரும் இந்த வேளையில் பழைய பல்லவிகளை பாடிக்கொண்டு மக்கள் முன் தோன்றுவார்கள்.
கரையோர மாவட்டம் என்றும் விவாக விவாகரத்து சட்டம் என்றும் தூக்கிப்பிடித்துக் கொண்டு வர தயாராகி வருகின்றனர். இந்த விடயத்தில் மக்கள் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். இந்த மாயாஜால வார்த்தைகளுக்கு மக்கள் நம்பிட்டுவிடக் கூடாது.
பொய்களையும் ஏமாற்று கருத்துக்களையும் முன்வைத்து எம்பீக்களை உருவாக்குவதும் பின்னர் அதைப் பறிப்பதும் தனக்கு வேண்டப்பட்டோருக்கு அந்த எம்பி பதவியை வழங்குவதும் அந்தக் கட்சிக்கு வாடிக்கையாகி விட்டது.
சபையை வென்று வருவோருக்கு எம்பி பதவி வழங்கப்படும் என்று புதுப் புரளியை இப்போது கிளம்பி விட்டுள்ளார்கள். அப்படி எதுவும் நடக்கப் போவதில்லை. வடக்கு கிழக்குக்கு வெளியே அந்த எம்பி பதவியை வழங்க தீர்மானிக்கப்பட்டு விட்டது. மக்கள் இந்த விடயத்தில் அவதாரமாக இருக்க வேண்டும் என்றும் யஹியாகான் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment