நடைபெறவுள்ள 2025 ஆம் ஆண்டு உள்ளுராட்சி மன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (20.03.2025) இன்று காலை நுவரெலியா மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 01 மாநகர சபை, 02 நகர சபைகள் மற்றும் 08 பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்களை நுவரெலியா மாவட்ட தேர்தல் அதிகாரி திருமதி துஷாரி தென்னகோன் முன்னிலையில் கையளித்தனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடதக்கது.
0 comments :
Post a Comment