நிகழ்வுக்கு கௌரவ அதிதிகளாக கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் மற்றும் பதில் பதிவாளர் எம்.ஐ.நௌபர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
சுமார் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்தின் மாணவர்கள், கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பங்கு கொண்டிருந்த இந்நிகழ்வுக்கு பிரதம பேச்சாளராக நளீமியா கலாபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அஷ் செய்க் ஏ.பி.எம். அப்பாஸ் (நளீமி) அவர்கள் கலந்துகொண்டு சிங்களத்திலும் தமிழிலும் உரையாற்றினார்.
நிகழ்வின்போது வரவேற்புரையை முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்தின் முஸ்லிம் பிரிவு தலைவர் எம்.ஏ.எம். ஆஷிப் நிகழ்த்தியதுடன் பல்கலைக்கழகத்தின் நிதியாளர் சி.எம். மங்கள வன்னியாராச்சி உள்ளிட்ட பலரும் உரையாற்றினர்.
எம்.யூ. பாத்திமா நிகாபா நிகழ்வுகளை தொகுத்து வழங்கியதுடன் முஸ்லிம் பிரிவின் உபசெயலாளர் எம்.ஏ.எம். அர்சாட் நன்றியுரை நிகழ்த்தினார். சமூகங்களின் ஒற்றுமையையும் அன்னியோன்யத்தையும் பறைசாற்றும் விதத்தில் மேடை நாடகமும் அரங்கேற்றப்பட்டிருந்தது.
இங்கு முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீட முஸ்லிம் சமூகம் சார்பில் பீடாதிபதி பேராசிரியர் முஸ்தபாவுக்கு நினைவுச்சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
நிகழ்வில் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் நிர்வாக உத்தியோகத்தர்கள் கல்விசாரா உத்தியோகத்தர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 comments :
Post a Comment