கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதான அபிவிருத்திக்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் 150 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் அதன் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இளைஞர் விவகார, விளையாட்டுத்துறை அமைச்சின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ரியல் அட்மிரல் ஷெமல் பெர்னாண்டோ சகிதம் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா இன்று அங்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
அதேவேளை சாய்ந்தமருது பொலிவேரியன் விளையாட்டு மைதானம் மற்றும் பௌசி விளையாட்டு மைதானம் என்பவற்றின் நிலைமைகளையும் நேரில் சென்று பார்வையிட்டார்.
கடந்த காலங்களில் அபிவிருத்தி பணிகள் எதுவும் முன்னெடுக்கப்படாமல் கவனிப்பாரற்ற நிலையில் மிகவும் மோசமாக காணப்படுகின்ற இவ்விளையாட்டு மைதானங்களை துரிதமாக அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து ஆதம்பாவா எம்.பி. இதன்போது விளையாட்டுத்துறை அமைச்சின் பணிப்பாளர் நாயகத்திடம் வலியுறுத்தினார்.
0 comments :
Post a Comment