சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற நோன்புப் பெருநாள் தொழுகை



எம்.எஸ்.எம்.ஸாகிர்-
சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் புனித நோன்புப் பெருநாள் தொழுகை இன்று திங்கட்கிழமை (31) இடம்பெற்றது.

ஆண்கள் மற்றும் பெண்கள் என ஒரே தடவையில், குறிக்கப்பட்ட உரிய நேரத்தில் பள்ளிவாசலின் பேஷ் இமாம் எம்.ஐ. ஆதம்பாவா ரஷாதியினால் தொழுகையும் துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.

அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட கரையோர பகுதிகளுக்கான அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா உட்பட சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கைப் பொறுப்பாளர் சபையின் தலைவர் டாக்டர் எம்.எச்.சனூஸ் காரியப்பர், செயலாளர் பொறியியலாளர் எம்.எம்.எம். முனாஸ், பொருளாளர் ஏ.எல்.எம்.முஸ்தபா, பிரதித் தலைவர் எம்.எஸ்.எம். முபாரக், உபதலைவரும் ஜம்இய்யத்துல் உலமா சபை சாய்ந்தமருது - மாளிகைக்காடு கிளையின் தலைவருமான மௌலவி அஷ்ஷேக் எம்.எம்.எம்.சலீம், உப செயலாளர்களான ஏஷர் மீீராசாஹிப், அபூபக்கர் பர்ஹாம், உப பொருளாளர் எம்.ஐ. நஜீம் உட்பட புதிய நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், ஜமாஅத்தினர், ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் எனப்பலரும் தொழுகையில் கலந்து கொண்டனர்.








எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :