நாபீர் பௌண்டேஷனின் வருகையினால் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிகளுக்குள் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்று கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், அம்பாறை மாவட்ட முதலாம் இலக்க சுயேட்சை குழுவில் மாம்பழச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் எம்.எல்.துல்கர் நயீம் தெரிவித்தார்.
இது தொடர்பில் இன்று (23) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாபீர் பௌண்டேஷன் தனது
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தபோது எங்களுக்கெதிராக 4 ஆட்சேபனைகளை முன்வைத்தார்கள்.
இதில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூரினால் 2 ஆட்சேபனைகளும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.மாஹிரினால் 2 ஆட்சேபனைகளும் முன்வைக்கப்பட்டது.
இந்த இரு கட்சியைச் சார்ந்தவர்களினால் முன்வைக்கப்பட்ட குறித்த ஆட்சேபனைகளை ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லையென்று நிராகரிக்கப்பட்டு விட்டது.
குறிப்பாக சம்மாந்துறை மக்களை பல வருடங்களாக ஏமாற்றி அவர்களின் வாக்குகளைப்பெற்று அரசியல் செய்த சம்மாந்துறையைச் சேர்ந்த அரசியல் பிரபலங்கள் நாபீர் பௌண்டேஷனின் அரசியல் வருகையைக் கண்டு அஞ்சிய நிலையில் காணப்படுகின்றதை எம்மால் காணக்கூடியதாக உள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் சம்மாந்துறை பிரதேச சபையை நாபீர் பௌண்டேஷனின் சுயேட்சை குழுவான மாம்பழ சின்னம் கைப்பற்றுமளவில் மக்களின் செல்வாக்கு நாளுக்கு நாள் இன்று அதிகரித்து வருகின்றதை அவர்களினால் தாங்க முடியாமல் உள்ளது என்றார்.
0 comments :
Post a Comment