அம்பாறை மாவட்ட அரசி ஆலை உரிமையாளர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்



- அட்டப்பள்ளத்தில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் ஆதம்பாவா எம்.பி தெரிவிப்பு

நூருல் ஹுதா உமர்-
ம்பாறை மாவட்ட அரிசி உற்பத்தியாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா தெரிவித்தார்.

கல்முனை கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் பிரிவு அரிசி ஆலை உரிமையாளர்கள் கூட்டுறவு சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு கடந்த (16) ஞாயிற்றுக்கிழமை நிந்தவூர் அட்டப்பள்ளத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சங்கத்தின் தலைவர் ஏ.எல்.பதுறுதீன் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் ஆதம்பாவா எம்.பி.தொடர்ந்து பேசுகையில் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டின் நெல் மற்றும் அரிசி உற்பத்தியில் அம்பாறை மாவட்டம் பிரதான பங்கு வகிக்கிறது. நெல்லை அரிசியாக மாற்றி இந்தப் பிராந்தியத்துக்கும், நாட்டுக்கும் வழங்கும் அரிசி உற்பத்தியாளர்களின் பணி பாராட்டத்தக்கது.

நாட்டில் உள்ள முஸ்லிம் வர்த்தகர்கள் எமது நாட்டின் பொருளாதாரத்திற்கும் முன்னேற்றத்திற்கும் சகல வழிகளிலும் பெரும் பங்களிப்புக்களை செய்து வருகின்றனர். அவர்கள் நாட்டுக்குரிய வர்த்தகர்களாக மாத்திரமில்லாமல் உற்பத்திகளை வெளிநாட்டுக்கும் ஏற்றுமதி செய்யக்கூடியவர்களாக மாற வேண்டும்.

இன்னும் ஓரிரு வருடங்களில் நாட்டில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டு மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளைப் போன்று எமது நாடும் மாற்றமடையும்.இதற்கான பாரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :