அரசின் வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளில் பல்கலைக்கழக ஊழியர்களுக்கு பாரிய அநீதி.- ஊழியர் சங்க செயலாளர் முகம்மட் காமில்!!



ரசின் புதிய வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளின் பிரகாரம் பல்கலைக்கழக ஊழியர்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும்; குறித்த அநீதியை அரசு கவனத்தில் எடுக்க வேண்டும் என்றும் அவ்வாறு இல்லாதுபோனால்; பல்கலைக்கழக ஊழியர்கள் தொடர் போராட்டம் ஒன்றுக்கு செல்லவேண்டி ஏற்ப்படும் என்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் செயலாளர் எம்.எம். முகம்மட் காமில் தெரிவித்தார்.

அரசின் வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகள் வெளிவந்துள்ள நிலையில்; அதனை ஆராய்ந்த பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தின் ஏகமனதான தீர்மானத்தின் அடிப்படையில்; தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்த ஒருமணிநேர அடையாள வேலை நிறுத்தம் பல்கலைக்கழக நிர்வாக கட்டிடத்தொகுதிக்கு முன்பாக 2025.03.04 ஆம் திகதி நண்பகல் 12.00 முதல் 01.00 வரை சங்கத்தின் உப தலைவர் ஏ.எல்.எம். ஹஸ்மிர் தலைமையில் இடம்பெற்றது.

இங்கு கருத்துத் தெரிவித்த போதே செயலாளர் மேற்படி கருத்துக்களை தெரிவித்தார். எம்.சி.ஏ. கொடுப்பனவு 45%வீதத்திலிருந்து 36% வீதமாக குறைக்கப்பட்டுள்ளதகவும் பல்கலைக்கழக ஊழியர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டுவந்த 20% வீத சிறப்பு உதவித்தொகை முழுமையாக இல்லாமலாக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக கொடுப்பனவிலும் குறைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

2011 ஆம் ஆண்டு 25000 ஆக இருந்த மாணவர்தொகை இப்போது 43000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அந்த அளவுக்கு ஊழியர்களின் தொகை அதிகரிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

பல்கலைக்கழக நிர்வாக கட்டிடம் முன்பாக கூடிய ஊழியர்கள் நியாயம் கோரி ஊர்வலமாகவும் சென்றனர்.









 



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :