காரைதீவு பிரதேச சபைக்கு ஐக்கிய சமாதான கூட்டமைப்பு தனித்துப்போட்டி



பாறுக் ஷிஹான்-
ள்ளுராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக அம்பாறை மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல் அலுவலத்தில் இன்றைய தினம்(18) அரசியல் கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தி வருகின்றன.

இதற்கமைய உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு சார்பாக காரைதீவு பிரதேச சபை வேட்பு மனுக்களுக்கான கட்டுப்பணம் இன்று (18) அம்பாறை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் செலுத்தியது.

இதன் போது ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கட்சியின் உப தலைவர் கலாநிதி ஹக்கீம் செரீப் உட்பட ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் இணைப்புச் செயலாளர் ஏ.எம். அகுவர் ஆகியோர் இணைந்து கட்டுப்பணத்தைச் செலுத்தினர்.

மேலும் எதிர்வரும் உள்ளூர் ஆட்சி சபை தேர்தலில் கொழும்பு மற்றும் புத்தளம் மாவட்டத்திலும் தமது ஐக்கிய சமாதான கூட்டமைப்பு போட்டியிட தீர்மானித்துள்ளதாக ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கட்சியின் உப தலைவர் சரீப் ஹக்கீம் எமது செய்தியாளர் பாறுக் ஷிஹானிடம் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :