புனித நோன்பு மாதம் ஆரம்பமாவதையிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்
அச்செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
ஏழை மக்களின் பசியை எல்லோரும் உணரச் செய்கின்ற புனித ரமழானில் இன சௌஜன்யம், சகோதரத்துவம், இன ஐக்கியம் என்பவற்றை பேணி நடப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ள ஒரு மாதத்தில் நாங்கள் இவற்றுக்கான முயற்சிகளை செய்ய முன்வர வேண்டும்.
இலங்கை வாழ் முஸ்லிம்கள் எப்பொழுதும் ஐக்கியத்தையும், சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும் விரும்புகின்றவர்கள். அந்த வகையில் இந்த ரமழான் மாதத்தையும் அதற்காக அவர்கள் பயன்படுத்துவதோடு எதிர்காலத்தில் ஐக்கியமிக்க இலங்கையை கட்டி எழுப்புவதற்கான பங்களிப்புகளை மேலும் காத்திரமான பணிகளாக மாற்றுவதற்கு முஸ்லிம் கல்விமான்களும், முஸ்லிம் தலைவர்களும் திடசங்கற்பம் பூண வேண்டும்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஏற்படவும் ஏழை மக்களின் துயர் நீங்கவும் அனைத்து மக்களும் ஒற்றுமையாகவும் நிம்மதியாக வாழவும் இந்த ரமழானில் நாம் எல்லோரும் பிரார்த்திக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்
0 comments :
Post a Comment