புதிதாக மலரும் எங்களது சம்மாந்துறை பிரதேசசபை ஒருபோதும் எதிர் அரசியல் சபையாக அமையாது. நாபீர் பௌண்டேசனின் தலைவர்!



ம்மாந்துறை பிரதேசசபையை நாபீர் பௌண்டேசனின் அரசியல்  கட்சியான தேசிய மக்கள் முன்னணி களம் இறக்கியுள்ள முதலாம் இலக்க மாம்பழ சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சைக்  குழு கைப்பற்றும் என்று நாபீர் பௌண்டேசனின் ஸ்தாபகரும் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் ECM நிறுவனத்தின் உரிமையாளரும் சமூக சிந்தனையாளருமான அல் ஹாஜ் உதுமான்கண்டு நாபீர் இன்று 2025.03.29 ஆம் திகதி ECM நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோது தெரிவித்தார்.

@ நாபீர் பௌண்டேசன் சார்பில் தெரிவாகும் உறுப்பினர்கள் சபையினூடாக எவ்வித ஊதியங்களையும் பெற மாட்டார்கள். குறித்த உறுப்பினர்களுக்கு அவர்களது வாழ்வாதாரத்துக்காக பௌண்டேசன் நிதி வழங்கும்.

@ மாட்டிறைச்சியின் விலைகளை இறைச்சிக்கடை உரிமையாளர்களுடன் பேசி குறைப்பதற்கான யுக்தி எங்களிடம் இருக்கின்றன.

@ பிரதேசசபை சட்டத்துக்கு அமைவாக சம்மாந்துறை பிரதேச மக்களும் ஏனையவர்களும் பயன்பெறும் பொறுட்டு மரக்கறித் தோட்டங்கள் நிர்வப்படும் அதற்கான இடங்களை அடையாளம் கண்டுள்ளோம்.

@ வெற்றிபெறும் எங்களது சுயேட்சைக் குழு ஒருபோதும் எதிர் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடாது. நடப்பு அரசாங்கத்தினதும் சபைக்குத் தெரிவாகும் ஏனைய கட்சிகளின் கருத்துக்களும் உள்வாங்கப்பட்டு சம்மாந்துறையில் புதிய அரசியல் கலாச்சாரம் ஒன்று தோற்றுவிக்கப்படும்.

@ தேர்தல் பிரச்சாரங்களின் போது போஸ்ட்டர் கலாச்சாரமும் அடிதடி விடையங்களுக்கு ஊக்குவிக்கும் திட்டமும் எங்களிடம் அறவேயில்லை.

@ பிரதேசசபையின் இயலுமைக்கு உட்பட்டதாக வெளிநாட்டிலிருந்து நிதியுதவிகளை கொண்டுவரக்கூடிய சக்தி எங்களிடம் இருக்கின்றது சம்மாந்துறை மக்கள் எங்களுக்கு வாய்ப்பைத்தந்தால் குறிப்பிட்ட கால எல்லைக்குள் மக்கள் நல திட்டங்களை ஆரம்பித்து குறைந்தது 2000 பேருக்கு வேலைவாய்ப்புக்களை உருவாக்குவோம்.

@ நாட்டின் இன ஐக்கியத்துக்கு சம்மாந்துறை பிரதேசசபையை உதாரணம் கூறும் அளவுக்கு சமூகங்களிடையே ஐக்கியத்தை ஏற்படுத்த பல்வேறு திட்டங்கள் எங்களிடம் இருக்கின்றன.

கடந்த 32 வருடங்களுக்கு மேலாக பல்வேறு சமூக நலத்திட்டங்களில் ஈடுபட்டுவரும் நாபீர் பௌண்டேசனின் செயற்பாடுகளில் மக்கள் திருப்தி கொண்டிருந்தால் மக்கள் வாக்களிப்பர். என்றாலும் மக்களது தீர்ப்பை நான் எப்போதும் மதிப்பவன் என்ற அடிப்படையில் நாபீர் பௌண்டேசனின் பணிகள் தொடரவேண்டுமா? என்பதை மக்களது கரத்திலேயே விட்டுவிடுகின்றேன். என்றும் தெரிவித்தார்.

 




எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :