சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்திச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த வைத்தியசாலை ஊழியர்களை உள்ளடக்கிய இப்தார் நிகழ்வு, சங்கத்தின் செயலாளர் எம்.ஐ.எம். சதாத்தின் நெறிப்படுத்தலிலும் பொறுப்பு வைத்திய அதிகாரியும் சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரியபள்ளிவாசலின் தலைவருமான டொக்டர் எம்.எச்.கே. சனூஸ் காரியப்பர் தலைமையிலும் வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் 2025.03.24 ஆம் திகதி இடம்பெற்றது.
வைத்தியசாலையின் பிரதிச் செயலாளர் எம்.எம். உதுமாலெப்பையின் மேற்பார்வையில் இடம்பெற்ற குறித்த இப்தார் நிகழ்வுக்கு அபிவிருத்திச் சங்கத்தின் பிரதித்தலைவரும் ஜும்ஆ பெரியபள்ளிவாசலின் உபதலைவரும் முபாறக் டெக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான எம்.எஸ்.எம். முபாறக் முழுஅனுசரணை வழங்கியிருந்ததுடன் நிகழ்வில் பிரசன்னமாகியும் இருந்தார்.
நிகழ்வின்போது கல்முனை பிராந்திய தொற்றா நோய்கள் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் இர்ஷாத்,சாய்ந்தமருது மாளிகைக்காடு உலமா சங்கத்தின் தலைவர் அஷ்செய்க எம்.எம். சலீம் (சர்கி) உள்ளிட்டவர்களுடன் வைத்தியசாலையின் ஊழியர்களும் அபிவிருத்திச் சங்கத்தின் நிர்வாகிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்வில் இன பாகுபாடின்றி இரண்டற கலந்து அனைவரும் பங்கு கொண்டிருந்தது விஷேட அம்சமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment