கிழக்கு மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு திருகோணமலை உப்புவெளி முகாமைத்துவ பயிற்சி அபிவிருத்தி திணைக்கள மண்டபத்தில் நேற்று (13) இடம்பெற்றது.
கிழக்கு மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்கள மாகாண ஆணையாளர் திருமதி எஸ்.வர்ணி தலைமையில் இடம்பெற்ற இந்த இப்தார் நிகழ்வுக்கு கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மோட்டார் போக்குவரத்து மற்றும் பயணிகள் போக்குவரத்து, கட்டிடங்கள் மற்றும் நிர்மாணம், வீடமைப்பு, கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கள் அமைச்சின் செயலாளர் எம்.எம்.நஸீர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும் பிரதிப் பிரதம செயலாளர் (நிதி) ஏ.எம்.எம்.ரபீக் கெளரவ அதிதியாகவும், கிழக்கு மாகாண காணி ஆணையாளர் திருமதி
வளர்மதி ரவீந்திரன் மற்றும் முகாமைத்துவ பயிற்சி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் ஏ.ஜீ.எம்.பசால் ஆகியோர் விஷேட அதிதிகளாகவும், மோட்டார் போக்குவரத்து திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment