சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசலின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வும், புதிய நிர்வாக சபை அறிமுகமும் நேற்று (16) ஞாயிற்றுக்கிழமை ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.
புதிய நிர்வாக சபையின் தலைவர் டாக்டர் எம்.எச்.கே.சனூஸ் தலைமையில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா வின் பங்குபற்றலுடன் நிகழ்வுகள் இடம்பெற்றன.
இப்தார் விசேட மார்க்க சொற்பொழிவையும் துஆப் பிரார்த்தனையினையும் சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் பேஷ் இமாம் மௌலவி அல்ஹாஜ் எம்.ஐ.ஆதம்பாவா (ரஸாதி) நிகழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து புதிய நிர்வாக சபை அறிமுகமும் இப்தாரும் இடம்பெற்றது. நிகழ்வின் நன்றியுரையினை சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலின் செயலாளர் பொறியியலாளர் எம்.எம்.எம்.முனாஸ் நிகழ்த்தினார்.
நிகழ்வில் சாய்ந்தமருது ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவர் மௌலவி எம்.எம்.எம். சலீம், சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலின் உப தலைவரும் முபாரக் நிறுவனத்தின் அதிபருமான எம்.எஸ்.எம். முபாரக், பொருளாளர் தொழிலதிபர் ஏ.எல்.எம்.முஸ்தபா உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள், சாய்ந்தமருது பிரதேச மஹல்லா பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், உலமாக்கள், புத்திஜீவிகள், வர்த்தகர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment