பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவாவின் துணிச்சலான செயற்பாடுகள் பாராட்டப்படவேண்டியவை. ஐக்கிய மக்கள் காங்கிரஸ் செயலாளர்.



நீண்டகாலமாக நிர்வாக பிரச்சினைகளில் மூழ்கி காணப்பட்ட சாய்ந்தமருது ஜும்மா பெரிய பள்ளிவாசலின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் முகமாக; இடைக்கால நிர்வாகம் ஒன்றை சிபார்சு செய்து அதனூடாக பள்ளிவாசலின் செயற்பாடுகளை இலகுபடுத்தியுள்ள தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவாவின் துணிச்சலான செயற்பாட்டை பாராட்டுவதாக ஐக்கிய மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் சமூக செயற்பாட்டாளருமான ஏ.சி. யஹியாகான் தெரிவித்தார்.

நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள உயரிய பணியை தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கால எல்லைக்குள் செய்து முடிப்பார்கள் என; தான் நம்புவதாகவும் பாராளுமன்ற உறுப்பினரால நியமிக்கப்பட்டுள்ள நபர்கள் விடையத்தில் அவர்களை நியாயப்படுத்த வரவில்லை என்றும்; அவர்களும் சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசலின் ஆள்புல எல்லைக்குள் பிறந்தவர்கள் என்ற அடிப்படையில் இதில் சிறந்தவர்கள் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கு தனது கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.

தற்போது உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலுக்கு நியமனப்பத்திரங்கள் கோரப்பட்டுள்ள நிலையில் போலியான வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றிய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பினாமிகள் மக்களை மீண்டும் ஏமாற்ற வருவார்கள். அவர்களது விடையத்தில் மக்களும் பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவாவும் அவதானமாக இருக்கவேண்டும் என்றும் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் முடியுமான உதவிகளை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தங்களது கட்சி வழங்கவுள்ளதாகவும் ஏ.சி. யஹியாகான் மேலும் தெரிவித்தார்.

கடந்த 2018 ஆண்டு தனது அரசியல் முன்னேடுப்பின்போது வெகுவாக பாதிக்கப்பட்டவன் என்ற அடிப்படியில் இவ்வாறான கருத்துக்களை முன்வைப்பதாக மேலும் தெரிவித்தார்.





எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :