ஹாஷிம் உமர் பௌண்டேஷனின் இன்னுமோர் பங்களிப்பு! ஊடக நிறுவனங்களுக்கு நிதியுதவி!!



லக்கிய புரவலர் ஹாஷிம் உமர் அவர்கள் தலைமையிலான ஹாஷிம் உமர் பௌண்டேஷன், காலத்துக்கு ஏற்றால்போல் பல்வேறு மனிதநேய செயற்பாடுகளில் ஈடுபட்டுவருவது பலராலும் பேசப்படும் விடையங்களில் முதன்மையானது.

பல நூறு இலக்கியவாதிகளின் இலக்கிய செயற்பாடுகளுக்கு காலம்காலமாக கைகொடுத்திருக்கும் இவர்கள், காலத்தின் தேவைக்கு ஏற்ப பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றார்.

பொருளாதார நெருக்கடியின் போது மின்கட்டணத்தை செலுத்த முடியாது இருந்த சில குடும்பாம்களின் வீடுகளுக்கு வெளிச்சமூட்ட வழிவகுத்தார். நாட்டில் ஏற்பட்ட வெள்ள நிலவரங்களின்போது முன்வந்து உதவியவர். பல்கலைக்கழக மற்றும் பாடசாலை மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக ஹாஷிம் உமர் பௌண்டேஷன் மடிகணணிகளை வழங்கி வருவது அந்த மாணவர்களின் தகவல் தொடர்பாடலூடான கல்விச்செயற்பாடுகளுக்கு மிகுந்த துணையாக இருந்து வருகின்றது. இவ்வாறான பணிகள் தொடர்கின்றன.
ஹாஷிம் உமர் பௌண்டேஷனினால் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் அமைப்புகளுக்கு நிதியுதவி வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ஐந்து ஊடக நிறுவனங்களுக்கு உதவித்தொகைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

கல்வி, ஊடகம், இலக்கியம் மற்றும் மனிதநேய உதவிகள் என நீண்டுசெல்லும் இலக்கிய புரவலர் ஹாஷிம் உமர் அவர்கள் தலைமையிலான ஹாஷிம் உமர் பௌண்டேஷனின் பணிகள் பாராட்டப்பட வேண்டியவை. புரவலர் ஹாஷிம் உமர் அவர்களின் மனிதநேய பணிகள் தொடரவும் அவரது ஆயுள் நீடிக்கவும் இம்போர்ட் மிரர் ஊடக வலையமைப்பு பிரார்த்திக்கிறது.







எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :