முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லாஹ் மக்கள் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தார்.



நூருல் ஹுதா உமர்-
திருகோணமலை மாவட்ட மூதூர் பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை (2025.03.08) மாலை மக்கள் சந்திப்பை மேற்கொள்வதற்காக தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் மற்றும் தேசிய காங்கிரஸின் உப தலைவர் டாக்டர் ஏ.உதுமான் லெப்பை, தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் டாக்டர் எம்.வை.எம்.சியா மற்றும் மூதூர் மத்திய குழு தலைவர் ஏ.எஸ்.எம்.நிஹார் கலந்து கொண்டனர்.

இதன் போது நடைபெற இருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. இதன் போது பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தது.

அத்துடன் மக்கள் தேவைகளை கேட்டறிந்து. அவற்றினை மிக விரைவாக நிவர்த்தி செய்வதாகவும் மற்றும் மூதூர் பிரதேசங்களுக்கு பல அபிவிருத்திக்கான வேலை திட்டங்கள் செய்ய இருப்பதாகவும் மற்றும் பல வேலை திட்டங்கள் செய்திருப்பதாகவும் மக்களுக்கு தெளிவுபடுத்தி இருந்தார். மற்றொரு மக்கள் சந்திப்பு மிக விரைவாக மூதூர் பிரதேசங்களில் மேற்கொள்ள இருப்பதாகவும் மக்களுக்கு தெரிவித்திருந்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :