சாய்ந்தமருது கமு/கமு/ மல்ஹருஸ் மகா வித்தியாலய வருடாந்த இப்தார் ஒன்றுகூடல் !



நூருல் ஹுதா உமர்-
ல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/ மல்ஹருஸ் மகா வித்தியாலய வருடாந்த இப்தார் ஒன்றுகூடல் நிகழ்வு ஆசிரியர்களின் பங்களிப்பில் நலன்புரி குழுவின் ஏற்பாட்டில் பாடசாலை அதிபர் றிப்கா அன்சார் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ரமழான் சிந்தனையையும், அண்மையில் காலமான பாடசாலை ஆசிரியர் எம்.பி.எம் ரியாத் அவர்களுக்கான துஆ பிரார்த்தனையையும் மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் பேஷ்இமாம் ஏ.எல்.எம். மின்ஹாஜ் (உஸ்மானி) நிகழ்த்தினார்.

இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கல்முனை கல்வி வலயத்தின் பணிப்பாளர் எம்.எஸ் .சஹுதுல் நஜீம் அவர்கள் கலந்து கொண்டிருந்ததுடன் மேலும் கல்முனை கல்வி வலயத்தின் பிரதி கல்வி பணிப்பாளர் எம்.எச். ஜாபிர், யூ.எல்.எம்.சாஜித், ஏ.சஞ்சீவன், எம்.எல்.எம். முதர்ரிஸ், சாய்ந்தமருது கோட்டக்கல்வி பணிப்பாளர் அஸ்மா அப்துல் மலிக், முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.என்.அப்துல் மலிக், ஆசிரிய ஆலோசகர்கள், பிரதேச ஏனைய பாடசாலை அதிபர்கள், அண்மையில் காலமான ஆசிரியர் எம்.பி.எம். ரியாத் அவர்களின் குடும்பத்தினர், பாடசாலையின் பிரதி, உதவி அதிபர்கள் , பகுதி தலைவர்கள், ஆசிரிய ஆசிரியைகள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கல்விசாரா ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :