தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம், புனித றமாழானை முன்னிட்டு தலைவரின் முயச்சியின் காரணமாக மூன்று வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியிருந்தது. அந்த வரிசையில் மூன்றாவது திட்டமான முஸ்லிம்களது நோன்புப் பெருநாள் உட்பட தமிழ் சிங்கள ஊழியர்கள் தாங்களது பெருநாள் தினத்தில் புரியாணி உண்டு பெருநாட்களை மகிழ்வுடன் கழிக்கும் வித்தத்தில் புரியாணி அரிசி பொதி வழங்கி வைக்கும் நிகழ்வு 2025.03.27 ஆம் திகதி ஊழியர் சங்க அலுவலகத்தில் இடம்பெற்றது.
ஊழியர் சங்கத்தின் நலன்புரி செயலாளர் ஏ.ஆர்.எம். ஷியாமின் வழிகாட்டலில் இடம்பெற்ற இந் நிகழ்வுக்கு சங்கத்தின் தலைவர் சி.எம். அஹமட் முனாஸ் பிரதம அதிதியாகவும் செயாலாளர் எம்.எம். முகமது காமில் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டு ஊழியர்களுக்கு பொதிகளை வழங்கி வைத்தனர்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஈத்தம்பழம் இறைச்சி என்பனவும் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இங்கு கருத்துத் தெரிவித்த தலைவர் முனாஸ், இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத், பதில் பதிவாளர் எம்.ஐ.நௌபர், அரபு மற்றும் இஸ்லாமிய கற்கைகள் பீடத்தின் பீடாதிபதி அஷ்செய்க் எம்.எச்.ஏ. முனாஸ் ஆகியோருக்கும் விஷேடமாக உதவிகளை வழங்கிய நன்கொடையாளர்களுக்க்ம் நன்றி தெரிவித்தார்.
நிகழ்வின்போது ஊழியர் சங்கத்தின் உயர்மட்ட உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் என பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment