சம்மாந்துறையின் தலைமைத்துவம் இம்முறை நாபீர் பௌண்டேசன் வசமாகும். ஈதுல் பித்ர் வாழ்த்துச்செய்தியில் பொறியலாளர் நாபீர்.



ம்முறை புனித ரமழான், நாட்டுக்கு விஷேடமாக சம்மாந்துறை மக்களுக்கு தேர்தல் ஒன்றினூடாக நல்ல தலைமைத்துவம் ஒன்றை தேர்ந்தெடுக்க சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது. நாட்டு மக்களும் குறிப்பாக சம்மாந்துறை மக்களும் அவர்களுக்கான சிறந்த தலைமைத்துவம் ஒன்றை தேர்ந்தெடுப்பார்கள். அந்தவகையில் சம்மாந்துறை மக்களுக்கு எந்த கட்சியோ அமைப்புக்களோ செய்யாத பல்வேறு பணிகளை நாபீர் பௌண்டேசன் செய்துள்ளது. சம்மாந்துறை மக்கள் உள்ளுராட்சிசபையினூடாக அடைந்துகொள்ளவேண்டிய பல்வேறு தேவைகள் உள்ளன அவைகளை நாபீர் பௌண்டேசனின் ஊடாக மட்டுமே பெற முடியும் என அவர்கள் அறிவர். எனவே சம்மாந்துறை மக்களின் அபிலாஷைகள் நிறைவேற; புனித ரமழானில் அவர்கள் சிறந்த தீர்மானத்தை எடுப்பார் என தான் நம்புவதாக தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாபீர் பௌண்டேசனின் ஸ்தாபகரும் ECM நிறுவனத்தின் தலைவரும் பொறியியலாளருமான உதுமான்கண்டு நாபீர் விடுத்துள்ள ஈதுல் பித்ர் வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.

ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று இறைவனின் கட்டளைகளுக்கு பணிந்து நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளை பின்பற்றி இன்று ஈகைத்திருநாளாம் ஈதுல் பித்ர் புனித நோன்புப்பெருநாளைக்கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும் எனது இதயபூர்வமான புனித நோன்புப் பெருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன் என்றும் அவரது ஊடக செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :